மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய விடயங்கள்

1488393030
1488393030

பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுத்தமாக இருப்பது அவசியமாகும்.

அந்தவகையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விடயங்களை பார்க்கலாம்.

மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.

உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.