சருமத்தில் ஏற்படும் தேமலை விரட்ட நாம் செய்ய வேண்டியது இதுதான்

1594122571 799
1594122571 799

எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.

மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும். மேலும், சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.

கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.