வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்!

1560161850 7492
1560161850 7492

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
முட்டைகோஸ் உடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்புக்கு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

கேரட் சாறும் தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.