மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது; காரணம் இதுதான்

13 1452667013 fish milk
13 1452667013 fish milk

அசைவ சாப்பாட்டில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவான மீனில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.

தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்க வழிசெய்கிறது.

இருப்பினும் இதனை சில உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதில் மீன் சாப்பிட்ட பின் பாலை உட்கொள்ள கூடாது.

ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

பால் உடலில் குளிரூட்டும் விளைவுகளைக் கொண்டுள்ளது. மீன் வெப்பமூட்டும் விளைவை கொண்டுள்ளது. எனவே அவற்றை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும்போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் பல்வேறு ஒவ்வாமைகளை அது ஏற்படுத்தும் .

மீனை சமைப்பதற்கு கூட தயிர் மற்றும் பால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு இவை இரண்டையும் கலந்து உண்பது நல்லது .

மீன் மற்றும் பாலை ஒரே நேரத்தில் இரண்டு புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. எனவே ஜீரண சக்தி உள்ளவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக பாதிக்கிறது.