தலைவலியை போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

625.0.560.350.160.300.053.800.668.160.90
625.0.560.350.160.300.053.800.668.160.90

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், தலைவலி, ஒற்றைத்தலைவலி ஆகியவை வரும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால், 30 நிமிடங்கள் , 3 மணி நேரத்துக்குள் தலைவலி சரியாகிவிடும்.

ஒரு கப் தண்ணீரில் 5-6 துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, இதை ஆறவிடவும். பின்னர் வடிகட்டி இளஞ்சூடாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கத் தலைவலி சரியாகும்.

அஷ்வகந்தா பொடியை வைத்துக் கொள்ளவும். பாலில் அஷ்வகந்தா பொடியை ஒரு தே.க அளவு கலந்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் அந்தப் பாலை குடிக்கவும். தலைவலி நீங்கும்.

போதுமான தூக்கம் இல்லையென்றாலும் தலைவலி வரும். எனவே, 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். சீஸ், புளித்த உணவு, பீர், வைன், கிரில்டு அசைவ உணவுகள் ஆகியவற்றில் உள்ள ஹிஸ்டமைன் எனும் கெமிக்கல் தலைவலியை உண்டாக்கும்.

தலைவலி வந்தால் அந்த இடத்தில் 3 துளி லாவண்டர் எண்ணெய்யோ 3 துளி பெப்பர் மின்ட் எண்ணெயோ தெளிப்பது நல்லது. இதனால் தலைவலி குறையும்.

4-5 வெற்றிலையை சிறிது நீர் விட்டு அரைக்கவும். தலையில் பத்து போடவும். அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகும்.