இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்: உணவுகள் விஷமாகும் அபாயம்!..

foods inoven 071120 400
foods inoven 071120 400

தற்போது மைக்ரோஓவன் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் முக்கியமான சமையலறை சாதனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மைக்ரோஓவன் சில உணவுகளை எளிதில் சமைப்பதற்கும், சமைத்த உணவுகளை விரைவில் சூடாக்கவும் உதவும் என்றாலும், அனைத்து உணவுப் பொருட்களையும் மைக்ரோ ஓவனில் சூடேற்ற முடியாது. ஒருசில உணவுகளை எக்காரணம் கொண்டும் ஓவனில் சூடேற்றக்கூடாது. மீறி சூடேற்றும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சாக மாற வாய்ப்புள்ளது. இப்போது அந்த உணவுப் பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

வேக வைத்த முட்டை

மைக்ரோஓவனில் வேக வைத்த முட்டையை சூடேற்றும் போது, நீர் மூலக்கூறுகளில் இருந்து நீராவி உருவாகி அழுத்தம் ஏற்படுகிறது. ஏனெனில் முட்டைகள் மெல்லிய சவ்வு மற்றும் ஓட்டைக் கொண்டுள்ளதால், அவற்றால் அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாது. வேக வைத்த முட்டையை ஓவனில் வைத்து சூடேற்றும் போது, அதிகப்படியான அழுத்தத்தால், அந்த முட்டை ஓவனில் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.

கேரட்

கேரட்டை மைக்ரோஓவனில் சமைக்கவும், சூடேற்றவும் முடியும் என்றாலும், கேரட்டை தோல் நீக்காமல் ஓவனில் சமைப்பது சற்று ஆபத்தானவை. அதிலும் கேரட் சரியாக கழுவப்படாமல், அழுக்குகளின் எச்சத்துடன் இருந்தால், மண்ணில் உள்ள தாதுக்கள் ஓவனில் தீப்பொறிகளை ஏற்படுத்தக்கூடும். மைக்ரோஓவனில் தொடர்ச்சியாக தீப்பொறி வெளிப்பட்டால், அது ஓவனுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பொதுவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் ஊட்டச்சத்துள்ள உணவு அல்ல. ஏனெனில் அதில் உப்பு, சுவையூட்டிகள், ரசாயனங்கள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் உள்ளன. அத்தகைய இறைச்சியை ஓவன் கதிர்வீச்சில் வைக்கும் போது, அதில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஹாம்ஸ் மற்றும் சாசேஜ்களை சமைத்து சாப்பிடுவதற்கான சிறப்பான வழி கிரில் அல்லது அடுப்பில் சமைத்து சாப்பிடுவது தான்.

தண்ணீர்

மைக்ரோஓவனில் நீரை சூடேற்றுவது என்பது மிகவும் எளிதான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், ஆய்வுகள் மைக்ரோஓவனில் சூடேற்றப்பட்ட தண்ணீரால் பல தீக்காயங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகளால் கையாளப்படும் போது இந்நிகழ்வு ஏற்படுவதாகவும் கூறுகின்றன. மைக்ரோ ஓவனில் உள்ள மின்காந்த அலைகள் தண்ணீரை விரைவில் அதிகளவு சூடேற்றக்கூடும். இது நீர் மூலக்கூறுகளை நிலையற்றதாக்குகிறது மற்றும் தீவிரமான கொதிநிலையால் சில சமயங்களில் வெடிப்புக்களைக் கூட ஏற்படுத்தும்.

சிக்கன்

சிக்கன் மிகவும் பிரபலமான ஒரு இறைச்சி. இது சால்மோனெல்லாவை எளிதில் பரப்பக்கூடியவை. குறிப்பாக சரியாக சமைக்கப்படாத பட்சத்தில், வேகமாக பரவும். சிக்கனை மைக்ரோஓவனில் சமைக்கும் போது, சிக்கன் சமமாகவும், முழுமையாகவும் சமைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் இது பாக்டீரியா மாசுபடுவதற்கான அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இது மற்ற இறைச்சிகளுக்கும் பொருந்தும். எனவே இறைச்சியை சமைப்பதற்கான சிறந்த வழி, நேரடியாக நெருப்பில் வாட்டவோ செய்யலாம் அல்லது வாணலியில் நேரடி வெப்பத்திற்கு மேல் வைத்து சமைக்கவும் செய்யலாம்.