அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வாழைத்தண்டு

1602582463 3357
1602582463 3357

நாம் அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்து கொண்டால் சிறுநீரக கற்கள் கரையும். அதுமட்டுமல்லாது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

இந்த வாழைத்தண்டில் அதிகளவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து சிருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.

தினமும் காலையில் இந்த வாழைத்தண்டை அரைத்து சாறாக குடித்து வந்தால் பசியை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

சிறுநீரக பாதையில் ஏற்படும் எரிச்சல், நோய் தொற்று, சிறுநீரக கல் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆரம்ப காலத்திலேயே வாழைத்தண்டை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் அணைத்து முற்றிபோகாமல் எளிதில் குணமடைந்துவிடும்.