சருமத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு பராமரிப்பது?

201911141104000013 Anti Ageing Home Remedies SECVPF
201911141104000013 Anti Ageing Home Remedies SECVPF

2 தேக்கரண்டி பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து அதனுடல் பால் கலந்து மாஸ்க் போல் போட்டு வாருங்கள். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் எந்த வித தழும்பின்றி பிரகாசமாக இருக்கும். படிப்படியாக நிறம் மெருகேறுவதை காண்பீர்கள்.

கசகசாவை இரவில் ஊற வைத்து மறு நாள் அதனை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் அல்லது வாரம் மூன்று நாட்கள் செய்தால், கழுத்து வாய்ப்பகுதிகளில் இருக்கும் கருமை மறைந்து நிறம் பெறும்.

குங்கமப்பூவை சில நிமிடங்கள் ஊற வைத்து அதனை நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். அதில் பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் அழகு பெறும். நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

தக்காளியை நசித்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் நிறம் பொலிவு பெறும்.