தலையில் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் குறிப்புகள்

1610369840 939
1610369840 939

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின் தோல் மேல் படர்ந்து விடுவதால் அவை தலைப்புண்களை உண்டாக்கலாம்.

வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து விழுதாக்கி, அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். அதே போல் நீருக்கு பதில் நல்ல தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, மறுநாள் காலை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது. எந்த தலைமுடி பிரச்சனைக்கும் மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும்.

சோற்று கற்றாழை சோற்றுப்பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே தடவவும். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு மிதமான சுடுதண்ணிரில் கழுவவும்.