தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

1576578903 8606
1576578903 8606

முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதது தான் முக்கிய காரணம். முடி கொட்ட ஆரம்பித்தால், உடனே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

வெங்காயச் சாறு முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருட்களுள் சிறப்பான ஒன்று. இது முடி உதிர்வதையும் குறைக்கும். எனவே வெங்காய சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊறவைத்து அலசி வருவது நல்ல பலனைத் தரும்.

கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்தி ஏற்ற மாதிரி சிறிய கிண்ணத்தில் எண்ணெய்யை தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி விரல்களால் நனைத்து, வேர்கள், உச்சந்தலையில் மற்றும் முடி முத்துவதும் தடவவும்.

உங்கள் விரல்களைக் கொண்டு தலையில் மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 2 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்து பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும். இது ஒரு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் அடர்த்தியான நீளமான முடி வளரும்.

ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். நீங்கள் இதைக் கொண்டு மசாஜ் செய்யும் போது மயிர்க்கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.