உடலில் கொலஸ்ட்ரால்சேர்வதை தடுக்கும் காராமணி!

201706251008140053 karamani black eyed beans health benefits SECVPF
201706251008140053 karamani black eyed beans health benefits SECVPF

காராமணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன.

காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.

காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது.