நல்ல பழங்களை எவ்வாறு தேர்வு செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

1561192364 1465
1561192364 1465

பழங்களை அவசியம் பார்த்துதான் வாங்க வேண்டும். திராட்சையின் காம்பு காய்ந்து உதிரும் தன்மையில் இருந்தால் அது சாப்பிடுவதற்கு ஏற்றது. காம்பின் நிறம் பழுப்பாக இருக்கவேண்டும். பச்சையாக இருந்தால் புளிக்கும்.

வாழைப்பழத்தை அவசியம் பார்த்து தான் வாங்க வேண்டும். காரணம் சில வகையான புள்ளி போட்ட வாழைப்பழங்கள் நமது ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே, பார்ப்பதற்கு அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழத்தை வாங்கலாம்.

ப்ளம்ஸ் பழம் வாங்கும்போது அதன் நிறம் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். எந்தவித கரும்புள்ளிகளோ, கீறல்களோ இல்லாமல் பழத்தின் மேற்பகுதி மென்மையானதாக இருக்கவேண்டும்.

மாம்பழத்தை வாங்கும் போது அதன் வாசனை மற்றும் தோலின் நிறம் மிக முக்கியமானது. இது சில வகை மாம்பழங்களை வேறுபடலாம். இதன் முனை காம்பில் வாசனை மிகுதியாக இருந்தாலோ, பழத்தை தொட்டு பார்க்கும்போது மென்மையாக இருந்தாலோ அதனை வாங்கலாம்.

வெடிப்பு, கீறல்கள், புள்ளிகள் தர்பூசணியில் மீது இல்லாமல் இருந்தால் அது நல்ல பழத்திற்கான அறிகுறி. மேலும், பழத்தின் அளவு மிக முக்கியமானது. மிக பெரிய அளவில் தர்பூசணியை வாங்குவதை விட மிதமான அளவில் இருக்கும் தர்பூசணியை வாங்குவது நல்லது.