முக அழகை மேம்படுத்தும் கடுகு எண்ணெய்!

1552984446 666
1552984446 666

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.

கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தின் அழகை கெடுக்கும் பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யுடன் 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.