தினமும் காலையில் பருகவேண்டிய இயற்கை சாறுகள்

1604377829 0956
1604377829 0956

நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நமது உடலில் இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதாலும், சுரந்த இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாததாலும் ஏற்படும் குறைபாடே நீரழிவு. இதை கட்டுக்குள் வைக்க நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

காலையில் பருக ஏற்ற சாறு வகைகள்

  1. அருகம்புல் சாறு: தேவையானவை: அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் – 2 தே.க , உப்பு – சிறிதளவு, எலுமிச்சைச்சாறு – தே.க

செய்முறை: அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பருகலாம்.

  1. பாகற்காய் சாறு: தேவையானவை: பாகற்காய் – ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு – சிறிதளவு, எலுமிச்சைச்சாறு – ஒரு தே.க

செய்முறை: பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம்.

  1. நெல்லிச்சாறு: தேவையானவை: நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை – கைப்பிடியளவு, உப்பு- சிறிதளவு.

செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.