சருமத்தை மெருகேற்ற உதவும் அழகு குறிப்புகள்

1599286771 7536
1599286771 7536

பாதாம் எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊறவைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து.

பால் பவுடரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம்.

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊறவைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.