கொசுக்கடி தாங்க முடியலையா? இதோ எளிய வழிமுறைகள்!

download 2 7
download 2 7

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன கொசுக்கள்.

ஆண்டு முழுதும் உலகின் ஏதாவது ஒரு பகுதி, கொசுக்களால் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

கொசுக்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில், மலேரியாவுக்கு காரணமான ‘அனோபிலஸ்’ மற்றும் டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு மிகவும் ஆபத்தானவை.

கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க என்னென்ன செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

  • சிறிது பூண்டை கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, அந்நீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்திடுங்கள். இதனால் பூண்டு வாசனை வீடு முழுவதும் பரவி, வீட்டிற்குள் கொசுக்களை வரவிடாமல் தடுக்கும்.
  • உங்கள் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் துளசி செடி தொட்டியை வைத்து வளர்த்து வந்தால், வீட்டிற்கு கொசுக்களை வரவிடாமல் தடுக்கலாம்.
  • எலுமிச்சையை இரண்டு பாதியாக வெட்டி, அதில் கிராம்புகளை சொருகி வைத்து, ஒவ்வொரு ஜன்னல் கதவுகளிலும் வைக்க வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் விலகி இருக்கலாம்.
  • வேம்பு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் கலந்து, கை, கால்களில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத்திற்கு கொசுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
  • ஒரு கப் நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஆங்காங்கு தெளித்திடுங்கள். இதனால் புதினா எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீடு புத்துணர்ச்சி அளிக்கும் வாசனையுடன் இருக்கும்.
  • கற்பூரத்தை நீரில் போட்டு கொசுக்கள் அதிகம் உள்ள அறை அல்லது கொசுக்கள் வரும் பகுதியில் வைத்துவிடுங்கள்.
  • உங்கள் வீட்டைச் சுற்றி அல்லது கூரையின் மேல் நீர் குட்டைகள் இருந்தால், அங்கு சிறிது காபி தூளை தூவுங்கள். இதனால் கொசு முட்டை அந்நீரில் இருப்பின், அது தானாக மேற்பரப்பில் மிதந்து, ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.
  • உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் வருமாயின், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஃபீவர்ஃப்யூ, சிட்ரோனெல்லா மற்றும் கேட்னிப் போன்ற தாவரங்களை வளர்த்து வாருங்கள்.
  • டீ-ட்ரீ ஆயிலை சிறிது நீரில் கலந்து, சருமத்தில் மீது தடவிக் கொள்ளுங்கள். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்த எண்ணெய் கொசுக்களை விரட்டுவதில் சிறந்ததோடு மட்டுமல்ல, கொசுக்கடிக்கும் சிகிச்சை அளிக்கும்.
  • ர கொசுக்கள் வரும் வீட்டு ஜன்னல் பகுதியில் சிறிது ரோஸ்மேரியை மட்டும் வையுங்கள். இதனால் வீட்டிற்கு கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.