குடல் இயக்கத்தினை சீராக்க உதவும் ஜாதிக்காய்!

1469604633 7689
1469604633 7689

ஜாதிக்காய் உஷ்ணத்தன்மை மிக்க ஒரு மூலிகை என்பதால் இது பெரும்பாலும் பசும்பாலில் கலந்தே மருந்தாக உட்கொள்ளப்படுகின்றன.

ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.

சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும்.

ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்த நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.

ஜாதிக்காய் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது. ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும் வயிற்றில் ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவை வராமல் தடுக்கிறது.

உடல் எடை குறைப்பதற்கு ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம் மன உளைச்சல், மன அழுத்தத்தினை போக்கும் நிவாரணியாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.