உணவில் அடிக்கடி முருங்கைக்காயை சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்!

201612101118451236 Strengthens bones Drumstick SECVPF
201612101118451236 Strengthens bones Drumstick SECVPF

முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளதால் மலட்டுத்தன்மை, விந்து வேகமாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

முருங்கைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் முருங்கைக்காயில் அதிகளவில் உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, தொடர்ந்து உணவில் முருங்கைக்காயை சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு முருங்கைக்காயில் அதிகளவு பயன்கள் உள்ளதால் உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இளம் வயது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனைக்கு இந்த முருங்கைக்காய் சிறந்த மருந்தாகிறது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவில் அடிக்கடி முருங்கைக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்கள் முருங்கைக்காய் சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.