வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

202006201438026818 Tamil News An excellent banana for people with constipation and SECVPF
202006201438026818 Tamil News An excellent banana for people with constipation and SECVPF

வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும். பருமனாய் இருப்பவர்கள் குஷிப்படுங்கள். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உடலுக்கு சேர்த்தால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம்.

வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் அசிடிடி வராமல், குடல்களையும், வயிற்றையும் பாதுகாக்கும்.

வழைக்காய் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி, அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் குறையும்.