தினமும் சூயிங்கம் மெல்லுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்!

article 2301030 18FDF8C7000005DC 677 468x449
article 2301030 18FDF8C7000005DC 677 468x449

சூயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதனை விரும்பி அசைபோடுகிறார்கள்.

சிறுவர்-சிறுமியர்களை கவரவேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில், வடிவங்களில் சூயிங்கம் கடைகளில் இருக்கின்றன.

சிலர் இதனை அன்றாடம் மெல்லும் பழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இப்படி தினமும் சாப்பிடுவது இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் தற்போது தினமும் சூயிங்கம் மெல்லுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்தை பார்ப்போம்.

  • சூயிங்கம்மில் இருக்கும் செயற்கை சர்க்கரை பற்களில் கூத்தை ஏற்பட காரணியாக இருக்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் அமிலத்தன்மை உள்ள ஃப்ளவர் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனம் போன்றவை பற்களை பாதிப்படைய வைக்கிறது.
  • தொடர்ந்து சூயிங்கம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைவலி பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இது தாடை பகுதியில் அதிகமாக அழுத்தம் ஏற்படுத்துகிறது இதனால் தான் தலைவலி ஏற்படுகிறது.
  • சூயிங்கம் மெல்லும் போது அதிகளவில் உங்களுக்கு தெரியாமலேயே காற்று உடலுக்குள் செல்கிறது. இதனால் ஐவிஎஸ் (IBS) எனப்படும் எரிச்சல் கொண்ட குடல் நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் குமட்டல், வாயுத்தொல்லை போன்றவை ஏற்பட இதுவும் கூட ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.
  • அதிகளவில் சூயிங்கம் மெல்லுவதால் தாடை தான் அதிகமாக பாதிப்படைகிறது. நாள்பட இது தாடை எலும்புகளில் தேய்மானம் ஏற்படவும் காரணமாகிறது. இதனால் காதுவலி, தலைவலி ஏற்படும் அபாயம் இருக்கிறது.
  • அதிகமாக சூயிங்கம் மெல்லுவதால், உடலில் பசி அதிகரிக்க செய்கிறது இதனால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
  • அதிக நேரம் சூயிங்கம் மெல்லுவதால், வாயில் எச்சில் அதிகமாக சுரக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றங்களை குறைக்கிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கானது.
  • கருத்தரித்த பெண்கள் அதிகம் சூயிங்கம் மெல்லுவதால் கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறதாம். எனவே, கருத்தரித்து உள்ள பெண்கள் சூயிங்கம் மெல்லுவதை தவிர்க்கவும்.