குடலில் ஏற்படும் புண்ணை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்

1583399390 2186
1583399390 2186

மலச்சிக்கல் தோன்ற காரணம் மலத்தை அடக்குதல், அதிக அளவு உணவு உண்ணுதல், மலச்சிக்கலால் குடல் பகுதியில் புண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அத்தில் இலை 25 கிராம், முற்றிய வேப்பிலை 25 கிராம் இவற்றை ஒரு 400 மிலி தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.

கார உணவுகளை நீக்கி விடவேண்டும். இரவு உணசுக்கு பதிலாக பசும் பால் காய்ச்சி பனை வெல்லம் சேர்த்து குடித்து வரவேண்டும். ஒரு மாத காலத்துக்கு பின் சிறிது சிறிதாக காரம் மற்றும் எல்லா சுவை உணவினையும் உண்ணும் நிலை ஏற்பட்டுவிடும். மலச்சிக்கல் தோன்ற காரணம் மலத்தை அடக்குதல், அதிக அளவு உணவு உண்ணுதல், மலச்சிக்கலால் குடல் பகுதியில் புண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுவது நல்லது.
தேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.