பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள்!

202012190905014880 Tamil News tamil news Ridge Gourd for Diabetes SECVPF
202012190905014880 Tamil News tamil news Ridge Gourd for Diabetes SECVPF

பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டா கரோட்டின் பார்வைக் கோளாறுகள் வராமலும், கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறது. மேலும் இது மிக குறைந்த கலோரியை கொண்டுள்ளது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக உதவுகிறது. ஏனென்றால் இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.