மாதவிடாய் காலத்தில் இதை கண்டிப்பாக சாப்பிடவே கூடாது!

1547965160 drinking 0
1547965160 drinking 0

மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை சாப்பிடுவதால் மனநிலை மாற்றம், சோகம் போன்றவை உண்டாகலாம். அல்லது உதிரப்போக்கு அதிகமாகவோ அல்லது உடல் வலியோ உண்டாகலாம்.

எனவே தான் சில வகையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

அந்தவகையில் தற்போது இக்காலக்கட்டத்தில் சாப்பிடகூடாதா உணவுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை, கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.
  • நன்றாக பொரிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், டோ நட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
  • உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், நீங்கள் உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
  • உப்பு சேர்த்து செய்யப்பட்ட நட்ஸ், ஸ்நேக்ஸ், ஊறுகாய், புகையால் சமைக்கப்பட்ட உணவுகள், போத்தலில் அடைக்கப்பட்ட உணவுகள், சீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.
  • மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள், ஸ்வீட்ஸ், கேட், குக்கீஸ் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பதன் மூலமாக எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.
  • ஆல்கஹால் பருகுவது என்பது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். மேலும் ஆல்கஹால் பருகுவதால் மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்க முடியாமல் போகும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.
  • கொழுப்பு நிறைந்த ரெட் மீட் ஆனது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியதாகும். இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் உடல் வலி உண்டாகும்.
  • காபி, டீ, காஃபின் உள்ள உணவுகள், எனர்ஜியை கொடுக்கும் பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபின் நிறைந்திருப்பதால், இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடும் போது உங்களுக்கு மன அழுத்தம் உண்டாகும். எனவே இரவு தூங்க போகும் முன்னர் காஃபின் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.