மாதுளையின் மகத்தான 10 மருத்துவப் பயன்கள்!

Pomegranate 600x441 1
Pomegranate 600x441 1

மாதுளை சிறந்த பல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது. ஒரு கப் மாதுளையில் (174 கிராம்) கீழ்கண்ட அளவிலான சத்துக்கள் அடங்கியுள்ளது:

நார் சத்து: 7 கிராம்
புரதம்: 3 கிராம்
வைட்டமின் சி: 30%
வைட்டமின் கே: 36%
ஃபோலேட்: 16%
பொட்டாசியம்: 12%

பொதுவாக அனைத்து பழங்களிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்களுடன் மாதுளம் பழத்தில் மிகவும் அதிகமாக பயன்கள் உள்ளன. மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழ மரம். ஊட்டச்சத்து நிறைத்த மாதுளம் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

இதயம் சம்மந்தமான நோய்கள், புற்றுநோய், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும். ஆல்சைமர் நோய் எனப்படும் நரம்பியல் நோய் மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும்.

உயிரணுக்களிலும் அழற்சியின் செயல்பாட்டைக் குறைக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மாதுளை சாறு பயனுள்ளதாக இருக்கும், புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும்.

மார்பக புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாதுளை சாறு பல வகையான மூட்டுவலிக்கு எதிராக பயனளிக்கும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய நோய்களுக்கான முக்கிய காரணியை குறைக்க உதவும். ஒரு ஆய்வில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 5 அவுன்ஸ் (150 மில்லி) மாதுளை சாற்றை இரண்டு வாரங்களுக்கு (15) உட்கொண்ட பிறகு அவர்களின் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ரத்த அழுத்தம் குறைந்துள்ளது.

பொதுவாக பற்கள், ஈறுகள் மற்றும் ஈஸ்ட் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிராக செயல்படும். மாதுளையில் நைட்ரேட் நிறைந்துள்ளது. இது உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படுத்தும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும், சோர்வு ஏற்படுவதை தாமதப்படுத்துவதாகவும், உடற்பயிற்சியின் திறனை அதிகரிப்பதாகவும் இருக்கிறது. மேலும் உடல் செயல்திறனுக்கு பயனளிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.