ஏராளமான வைட்டமின்களை கொண்ட சொடக்கு தக்காளி

1605587665 6644
1605587665 6644

சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதென அறிவியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இதன் அற்புதமான பயன்களில் ஒன்று உங்கள் டி.என்.ஏ வில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்துவதாகும்.

சொடக்கு தக்காளியில் ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது. கண்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க கரோட்டினாய்டுகள் அவசியம்.

கேரட்டை போலவே இதுவும் கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமான பொருளாகும். குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்த சொடக்கு தக்காளி அவர்களின் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களும், சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இந்த தக்காளியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உங்கள் எலும்புகளை வலிமையாக்க உதவும்.

நார்ச்சத்து அதிகமுள்ள இந்த தக்காளியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அதில் உள்ள பெக்டின் நார்ச்சத்து உங்கள் செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் மலசிக்கல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.