சேப்பக்கிழங்கில் இத்தனை சத்துக்கள் உள்ளதா?

1598589289 6572
1598589289 6572

இதன் கிழங்கு மட்டுமல்ல தண்டு மற்றும் இலையையும்கூட சமைத்துச் சாப்பிடலாம். புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

புளிக்குழம்பு வைப்பவர்கள்
இந்த தண்டினை அதனுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இலையில் டோக்ளா செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும்.

சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடல் புண்கள் விரைவில் குணமாகும். நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது. சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணமாக்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ஏமற்றும் இ சருமத்தினைப் பாதுகாக்க உதவுகிறது.

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.