குறட்டை தொல்லையில் இருந்து விடுபட குறிப்புகள்

Snoring 696x463 1
Snoring 696x463 1

குறட்டை வருவதற்கு உடற்பருமன், தொண்டை கோளாறு, வாய் கோளாறு, நாசி கோளாறு, உறக்கமின்மை போன்றவை காரணமாக இருக்கலாம். புகைப் பழக்கத்தினால் குறட்டை தொல்லை அதிகரிக்கும். குறட்டையால் அருகில் உறங்குவோருக்கு உறக்கம் கெடுகிறது. உறங்குவதற்கு முன் மது அருந்தினால் குறட்டை வரலாம். .

குறட்டைத் தொல்லையில் இருந்து விடுபட உங்களுக்கு பயனுள்ள சில டிப்ஸ்:
மது : மது அருந்துவதால், தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மது அருந்துவதை தவிர்க்கவும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்.

புகை பழக்கம்: புகை பிடிப்பதால் சுவாசப் பாதையில் எரிச்சல் உண்டாகுவதால் புகை பிடிப்பதை தவிர்க்கவும். புகை பிடித்தால் குறட்டை தொல்லை அதிகரிக்கும்.

பழங்கள்: உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே, மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், கமலாப்பழம், அன்னாசிப் பழம், ஆகியவை சாப்பிடலாம்.

உடல் எடை: உடற்பருமன் உள்ளவர்களுக்கு குறட்டை வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை வைத்துக்கொள்வதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.

தலை உயர்த்தி படுக்கவும்: நன்கு உயரமான தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து உறங்கவும். தலையை உயர்த்தி வைத்து உறங்கும் பொழுது உங்களால் சீராக சுவாசிக்க முடியும்.

இஞ்சி: சூடான நீரில் எலுமிச்சை சாறு சிறிது ஊற்றி, அதனுடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம். தினமும் இஞ்சி, துளசி, மிளகு மற்றும் ஏலக்காயை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனையை தடுக்கலாம்.