ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள புளி!

inner3211591733481
inner3211591733481

குழம்பில் சேர்க்கும் புளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால் துடிப்பவர்கள் புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்றாக கரைத்து, அதோடு பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீங்கினாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ புளியை நன்றாக கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ்பதத்துக்கு தயாரித்து, அடிபட்ட இடத்தில் இந்தக் கூழை அளவான சூட்டில் பத்து போட்டால் வலி குறைந்து வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாகும்.

வெயில் காலங்களில் நீர்க்கடுப்பு ஆண்களை வாட்டி எடுத்துவிடும். அந்த நேரங்களில் ஆண்குறியில் சிலருக்கு கடுமையான எரிச்சலும் வலியும் ஏற்படும். அந்த சமயங்களில் புளியங்கொட்டையை முழுவதுமாகவோ அல்லது அதன் தோலை மட்டுமோ எடுத்து சாப்பிட்டால் உடனடி குணம் கிடைக்கும்.

நாள்பட்ட அழற்சி காரணமாகத் தான் நமக்கு நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நாள்பட்ட அழற்சியை போக்க புளிக்கரைசல் அல்லது புளியை பயன்படுத்தி டீ போட்டு அதில் தேன் சேர்த்து தினமும் குடித்து வரலாம். இது நல்ல முன்னேற்றம் தரும்.

புளியில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ப்ளோனாய்டுகள், பாலிபீனால்கள் போன்றவைகள் உள்ளன. இவைகள் நம்ம உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை குறைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இருதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதில் புளி மிக வேகமாக செயலாற்றும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த புளி இனிப்புகள், பலகாரங்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பெருமளவு பயன்படுகிறது. நாமும் புளியை அளவோடு சாப்பிட்டு நிறைந்த பயன் பெறுவோம்.