ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்

inner211561969959
inner211561969959

ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆலிவ் எண்ணெய் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலிவ் எண்ணெயில் என்ன நன்மை இருக்கிறது? பார்ப்போம்…

ஆலிவ் எண்ணெயில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது.

ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக டைப் 2 டயாபடீஸைக் குறைக்க முடியும்.

வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு.

இதில் உள்ள நல்ல கொழுப்பு, லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.

தினமும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.

மேலும், இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், டி என் ஏ மூலக்கூறுகளை தாக்குவதை தடுக்கிறது.

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலேயுரோபின் எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கல்சியத்தை எலும்புகளில் சேர்க்கும்.

ஆலிவ் எண்ணெயில் மசாஜ் செய்ய, நரம்புகளை இயல்பாக்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம் குறைகிறது.

தினமும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது, அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும்.

ஆலிவ் எண்ணெயிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணமாக்கி, சரும செல்களை பொலிவாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும்.

தலையில் ஆலிவ் எண்ணெயை தேய்த்துவர முடி உதிர்தல் குறையும், பொடுகைக் கட்டுப்படுத்தும். அதோடு, முடியை பளபளப்பாக்கி, அதன் வளர்ச்சியை தூண்டும்.