இஞ்சி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் அற்புத பயன்கள்!

IMG 20210612 WA0003
IMG 20210612 WA0003

இஞ்சியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இஞ்சி மூழ்கும்படி சுத்தமான தேனை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இதை பத்து நாட்கள் சூரிய ஒளியில் வைத்து வர வேண்டும். பத்து நாட்களும் இஞ்சி தேன் கலவையை நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து முறை கிளறி விட வேண்டும். பத்து நாட்கள் கழித்து இதை சாப்பிடுவதற்கு பயன்படுத்தலாம் வெயிலில் வைக்க தேவையில்லை இதுவே இஞ்சி கற்பத்தின் செய் முறையாகும் சாப்பிட வேண்டிய முறை தினமும் அதிகாலை ஆறு மணி அளவில் இஞ்சி கற்பத்தில் இரண்டு ஸ்பூன் எடுத்து வெறும் வயிற்றில் முதல் உணவாக இதை உண்ண வேண்டும்.

இதனால் கிடைக்கின்ற பயன்கள் :-

*நோய்கள் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமான இருக்கின்ற மலச்சிக்கல் முழுமையாக நீங்கிவிடும்

*மலச்சிக்கல் நீங்கி விட்டால் இதன் மூலம் ரத்தம் சுத்தமடையும் வாதம் பித்தம் சிலேத்துமம் சமநிலையில் இருக்கும்

*ரத்தம் சுத்தமாவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்

*மேலும் வாத பித்த சிலேத்துமம் சமநிலை படுவதால் உடலில் நோய்கள் எதுவும் தோன்றாது

*நோய்கள் தோன்றாமல் இருப்பதால் இதன் மூலம் இளமையும் ஆரோக்கியமும் மிக எளிதாக கிடைத்துவிடும்

*மேலும் இஞ்சி கற்பத்தை சாப்பிட்டு வந்தால் வாத குணத்தின் செயல்பாடு எப்பொழுதும் சமநிலையில் இருக்கும்

*வாத குணம் சமநிலையாய் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் கை கால் முடக்கம் எனும் வாதநோய் எப்பொழுதும் நம் உடலில் தோன்றாது

இதற்கு காரணம்

இஞ்சி கற்பத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாது ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதால் வாத நோய் நமது உடலில் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகின்றது

மேலும் இஞ்சி கற்பத்தை சாப்பிட்டால் மாரடைப்பு வராது பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு வலி குணமாகும்

இஞ்சியின் முக்கிய பயன்கள்

ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் அதே அளவு சின்ன வெங்காயச் சாற்றைக் கலந்து தினந்தோறும் காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையும் அழகும் முதுமை வரை பாதுகாக்கப்படும்.

உரித்த பூண்டு இதழ் ஆறு அதே அளவு தோல் சீவிய இஞ்சி இவை இரண்டையும் விழுதாக அரைத்து நீரில் கலந்து கொதிக்க வைத்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நோய்கள் எதுவும் உடலில் தோன்றாத வண்ணம் நம்மை காக்கும் முதுமை வரை நோயின்றி ஆரோக்கியமாய் வாழலாம்.

இஞ்சி சாறும் எலுமிச்சை சாறும் வகைக்கு ஒரு ஸ்பூன் அளவு கலந்து இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தோன்றும் நோய்கள் எதுவும் நமது உடலில் தோன்றாது எப்போதும் சுறுசுறுப்பாக உடலின் இயக்கங்கள் இருக்கும்.