சுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த மாம்பழம்

vikatan 2019 05 66ad3b5e 4ad9 4fe8 87df 3b30c0446f5e 88005 thumb
vikatan 2019 05 66ad3b5e 4ad9 4fe8 87df 3b30c0446f5e 88005 thumb

முக்கனியில் ஒன்றான மாம்பழம், இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் விளைகிறது.

மாம்பழம் சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் உள்ள பல மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில பின்வருமாறு….

மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் விற்றமின் பி6 அதிகம் உள்ளது.

மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.

மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் நரம்பு தளர்ச்சியை போக்கும், பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.

150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிடலாம்.

மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.

செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம்.

மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. இது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த உதவும்.