கிர்ணி பழத்தின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்!

Muskmelon benfits min
Muskmelon benfits min

கோடைக்காலம் இயற்கையின் கொடையாக பல பழங்களை நமக்கு அளித்திருக்கிறது. கோடைகாலத்தில் நாம் விரும்பி குடிக்கும் பழங்களில் ஒன்று கிர்ணி பழம். கிர்ணி பழத்தின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இங்கே காணலாம்.

ஒட்டு மொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. முதிர்வின் வயது தொடர்பான பார்வை சிக்கல்களைத் தடுக்கிறது. கண் பார்வைக்கு நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி
ஊட்டச்சத்து அதிகமுள்ள முலாம்பழம் விற்றமின் சி மற்றும் ஏ தேவைகளில் பாதியை வழங்குகிறது. விற்றமின் ஏ ஆரோக்கியமான பார்வையை அளிக்கிறது. விற்றமின் சி சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

தோல் ஆரோக்கியம்
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலாஜனால் நிரம்பியுள்ளது. இது தோல் திசுக்களை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. விற்றமின் சி நிறைந்த பழமும் இயற்கையான பளபளப்பைத் தூண்ட உதவுகிறது.

விற்றமின் ஏ, சி
விற்றமின் ஏ, பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை நோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன. விற்றமின் சி பாதுகாப்பான வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியையும் தூண்டுகிறது.

நீர்ச்சத்து
அதிக நீர் இருப்பதால் மிகவும் விரும்பி உண்ணப்படும் கோடைகாலப் பழங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் நீர்ச்சத்து குறையாமலிருக்க உதவுகிறது.

தலைமுடி ஆரோக்கியம்
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. விற்றமின் ஏ மிகுதியாக உள்ளது. ஆரோக்கியமான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கு விற்றமின் ஏ மிக முக்கியமானது. விற்றமின் ஏ சரும உற்பத்தியையும் எளிதாக்குகிறது. தலைமுடியை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. கிர்ணி பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இரத்த அழுத்த அளவை சரி செய்கிறது.