ஒரு நாளைக்கு 20 நிமிடம் கை தட்டினால் இவ்வளவு நன்மையா!

ea0d1bd22660b09a73af2746fb59660ebd489bd0ff579f3c2c6764c65127877a
ea0d1bd22660b09a73af2746fb59660ebd489bd0ff579f3c2c6764c65127877a

மிக எளிமையான வேலையான கை தட்டுதல் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறது. பொதுவாக கை தட்டுதல் அடுத்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக செய்யும் காரியம். சிலருக்கு பாடல்கள் பாடும் போது கை தட்டும் பழக்கம் உண்டு. கை தட்டுதல்லால் பல நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒருவிதமான உடற்பயிற்சி தான்.

கை தட்டுவதன் மூலமாக ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.