பழம்பாசியின் மருத்துவப் பயன்கள்

பழம்பாசி
பழம்பாசி

பழம்பாசி இதயவடிவான இலைகளை கொண்டது. இதன் இலை பசிய இலையையுடைய சிறு செடி. பழம்பாசி இலைகளே மருத்துவ பயனுடையது. சதை நரம்புகளை சுருங்க செய்தல், வெப்பம் போக்குதல் ஆகிய குணமுடையது.

மருத்துவப் பயன்கள்

  • இலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்து களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்ட பழுது உடையும்.
  • 50 கிராம் அளவு இலையை  சிறிது சிறிதாக அரை லீற்றர் பாலில் போட்டு வேகவைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் 3 வேளை சாப்பிட மூலச்சூடு தணியும். இதை 20 மி.லி அளவாக குழந்தைகளுக்கு காலை, மாலை கொடுக்க இரத்தக்கழிச்சல், சீதக்கழிச்சல் ஆகியவை தீரும்