சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

download 44
download 44

இன்றைய அவசர உலகத்தில் பெரும்பாலோனோருக்கு மனச்சோர்வு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பெற்றோர்களுக்கு குழந்தைகள் எதிர்காலம் பற்றிய பயம், மாணவர்களுக்கு, அதிகமான மதிப்பெண் பெற வேண்டும் என்ற நெருக்கடி, வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உண்டாகும் நெருக்கடிகள். இதனால் அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பயம் அதிகமாகிவிடுகிறது.

யோகா ஒரு மிகச்சிறந்த கலை. நம் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி நம்மை நலமுடன் வாழ வழிவகுக்கும். சிரிப்பு நம்மை கவலைகளில் இருந்து மீட்டெடுக்கின்றது. இப்படிப்பட்ட யோகாவையும் சிரிப்பையும் கலந்து பயிற்சி செய்வது அருமருந்தாகிறது.

மன அழுத்தத்தின் போது கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும். சிரிக்கும் போது, மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் ஆன கார்டிசோல் அளவு குறைவதால் இப்பயிற்சி மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

என்டார்பின் என்னும் ஹாப்பி ஹார்மோன் நாம் சிரிக்கும் போது பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைப்போதலாமஸில் இருந்து சுரக்கின்றது. இவை சிறந்த வலி நீக்கியாக செயல்படுகிறது.


சிரிப்பு யோகா பயிற்சி உடலில் மனஅழுத்த ஹார்மோன்களின் அளவை குறைத்து, லிம்போ சைட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு செல்களின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது

இப்பயிற்சியின் போது அதிக அளவு ஒட்சிசன் நம் உடலுக்குள் செல்வதால் இரத்த ஓட்டம் சீராகி, இரத்த குழாயின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

நுரையீரலில் காற்று பரிமாற்றம் சீராக நடைபெற செய்வதன் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

தொடர்ந்து இப்பயிற்சியினை மேற்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு யோகா பயிற்சியினை இரத்த அழுத்தத்தினை சீராக வைத்துக் கொள்ள மாற்று சிகிச்சையாக பயிற்சி செய்யலாம் என்கின்றனர்.

செரோடோனின் எனப்படும் ஹேப்பி ஹார்மோன் விழிப்பு மற்றும் தூக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களை தூண்டுகிறது. இன் சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

ஆக்ஸிடோசின் எனப்படும் ஹார்மோன் சிரிக்கும் போது சுரப்பதால் இவை புரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவை பால் உற்பத்தியை தூண்டுகிறது.

சிரிக்கும் போது எதிர்மறையான எண்ணங்கள் குறைந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது.

உறவுகளை உற்சாகமாகவும், புதியதாகவும் வைத்திருக்க பயன் உள்ளதாக உள்ளது. சிரிப்பு மக்களை கடினமான காலங்களில் ஒன்றிணைக்கிறது.