குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத உணவு பொருட்கள்

1559196906 3802
1559196906 3802

சமைத்த பொருட்களை குளிர்சாதன பெட்டியில் பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது.

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.

பூண்டை எப்போதுமே குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்குகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும்.

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.