உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் மரிக்கொழுந்து!

1527745210 1575
1527745210 1575

உடலுக்கு கெடுதல் செய்யும் வியாதிக் கிருமிகளை அழிக்கும் மரிக்கொழுந்து, சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு, மருந்தாகிறது.

உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது.

சிலருக்கு மன உளைச்சல்கள் அல்லது உடல் நல பாதிப்புகள் காரணமாக, இரவில் உறக்கம் வராது. ஊரெல்லாம் உறங்கும் நேரத்தில், எனக்கு மட்டும் தூக்கம் இல்லையே, என்று நள்ளிரவில் வருந்திக் கொண்டிருப்பார்கள். இதனால் பணி இடங்களிலும், வீட்டிலும், அவர்களின் பகல் வாழ்க்கை, எதிலும் ஈடுபாடில்லாமல், கழியும். இத்தகைய பாதிப்புகள் நீங்கி, நல்ல தூக்கம் வர உதவும், மரிக்கொழுந்து. தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல, அமைதியான உறக்கம், இயல்பாக வரும்.

மரிக்கொழுந்து இலைகளை அரைத்து விழுதாக்கிக் கொண்டு, அதில் ஒரு தம்ளர் தண்ணீர் கலந்து சற்று நேரம் ஊற வைக்கவும். பின்னர், அந்த நீரைப் பருகி வர, வயிற்று வலி குணமாகும். உடல் தோலில் பூஞ்சைகள் தொற்றால், சரும கோளாறு உள்ளவர்கள், இந்த நீரை தினமும் பருகி வர, நச்சுத் தொற்றுகளினால் ஏற்பட்ட சரும பாதிப்புகள் விலகி விடும். மரிக்கொழுந்து, உடல் சூட்டினால் உண்டாகும், வயிற்றுக் கடுப்பு மற்றும் நீர்க்கடுப்பு பாதிப்புகளை தணிக்கும் ஆற்றல் மிக்கது.

வாணலியில் நல்லெண்ணை விட்டு சற்று சூடு வந்ததும், விழுதாக அரைத்து வைத்திருக்கும், மரிக்கொழுந்துடன் சிறிது சுக்குத்தூள் கலந்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையை இறக்கி, சற்று ஆறியதும், நெற்றியில் பற்று போல தடவி வர, தலைவலி விலகும்.

மூட்டு வலிக்கு : கை கால் மூட்டு வலிகளுக்கு, வலியுள்ள இடங்களில் இந்த மரிக்கொழுந்து எண்ணை விழுதை தரவி வர, உடனடியாக, வலிகள் நீங்கும். வீக்கம் மற்றும் கட்டிகளுக்கும் நல்ல குணமளிக்கும், ஆற்றல் வாய்ந்தது. இதன் இதமான நறுமணம், மனதிற்கு அமைதியை அளிக்கும். உடல் வலியால் உறக்கம் வராமல் தவித்தவர்கள், மரிக்கொழுந்து மருந்தை உடலில் பாதிப்புள்ள இடங்களில் தடவி வர, இழந்த உறக்கத்தைத் திரும்பப் பெற்று வலியின்றி உறங்கலாம்.

மரிக்கொழுந்து தைலம்: வாணலியில் சிறிது தேங்காயெண்ணையை ஊற்றி, அதன் பின்னர் விழுதாக அரைத்த மரிக்கொழுந்தை அதில் சேர்த்து, எண்ணை காய்ந்து, தைலம் போல வரும்வரை காய்ச்சி, பின்னர் ஆற வைக்கவும். இதை சொரியாசிஸ் போன்ற கடுமையான தோல் வியாதிகள் உள்ள இடங்களில் தடவி வர, வியாதிகள் விலகி விடும். மேலும், அரிப்பு மற்றும் வலியைத் தரும் வீக்கங்களின், பாதிப்பை சரியாக்கி, அவற்றை குணமாக்கி, வலிகளையும் போக்கும் வல்லமை மிக்கது மரிக்கொழுந்து.