அச்சுறுத்தும் நிபா வைரஸ் என்பது என்ன?

202109060852303491 Nipah virus back in Kerala Things to know SECVPF
202109060852303491 Nipah virus back in Kerala Things to know SECVPF

நிபா வைரஸ் என்பது விலங்குகள் வழியாக மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் நோய்களைப் பரப்பும் வைரஸ் கிருமி். விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கும் பரவக்கூடியது. நிபா வைரஸ் பொதுவாக, பழங்களை சாப்பிடக்கூடிய வௌவாலில் இருந்து மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவுகிறது. இதேபோல் பன்றியின் மூலமாகப் பரவுகிறது என்றும் சொல்லப்படுகின்றன. மற்ற விலங்குகளில் இருந்து பரவுவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பழங்களை சாப்பிடும் வௌவால்கள் மற்ற விலங்குகளைக் கடித்தாலும் அல்லது அதன் எச்சில் பட்டாலும் இந்த நிபா வைரஸ் பரவும். விலங்குகளின் சிறுநீர், சலைவாய் போன்ற திரவங்களின் வழியாக, மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுடைய சிறுநீர், வேர்வை, எச்சில் ஆகியவற்றின் மூலம், அருகில் இருக்கும் மனிதர்களுக்கும் இந்த நிபா வைரஸ் பரப்பப்படுகிறது.

இது முதலில் பன்றியிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என்றாலும், இது நாய், ஆடு, குதிரை போன்ற சில வளர்ப்புப் பிராணிகளிலும் காணப்படுகிறது. விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், மனிதர்களுக்குள்ளும் பரவும். ஆனால், நம்மைத் தாக்கும் இந்த வைரஸால், இதைப் பரப்பும் வௌவாலுக்கு எந்த ஆபத்தும் வராது.

இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்படும். உடலில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சிலருக்கு, வலிப்பு கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இந்த நிபா வைரஸ் தாக்கினால் அதன் பாதிப்புகள் கிட்டதட்ட 15 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புண்டு. இந்த வைரஸ் தாக்கப்பட்டால், நினைவிழப்பு, மூளைக்காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு, மரணம் வரை கொண்டுபோய் விடும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்த நிபா வைரஸின் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து 30 சதவீதம் வரை மட்டுமே காப்பாற்றுவதற்கான வழிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.