கொரோனாவுடன் கூடிய கோடை காலத்தை எதிர்கொள்ளும் முறைகள்!

Summer health tips001 1 1024x574 1
Summer health tips001 1 1024x574 1

இயற்கை அழகு நிறைந்த மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், இந்த ஆண்டு நாம் அனைவரும் கோடையோடு, கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வழக்கத்தை விட இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்குமோ என்பதில் தொடங்கி, கோடையில் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமா என்பது வரையிலான சந்தேகங்கள் ஏராளம். எனவே, கோடை காலத்திற்கு ஏற்ப மனிதன் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்க முக்கிய 8 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1 காரமில்லா உணவு
2 தண்ணீர் அதிகமாக குடியுங்கள்
3 நடைப்பயிற்சி
4 இயற்கை குளிர் பானங்கள்
5 மதிய நேர பயணம்
6 எண்ணெய் குளியல்
7 கோடையில் சரும பாதுகாப்பு
8 கோடைக்கால ஆடைகள்
ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.