எலுமிச்சை புல் தேநீர் குடிப்பதன் நன்மைகள் !

1615962917 1924
1615962917 1924

எலுமிச்சை புல் இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை குணமாக்க உதவியாக இருக்கிறது. இதுமட்டுமன்றி பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.

மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது. எலுமிச்சை புல் டீ பருகுவதால் இருமல், குளிர் காய்ச்சல் இருப்பின் அவற்றை குணப்படுத்துகிறது.

நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் அவதி படுபவர்களுக்கு உதவுகிறது. நச்சு பொருட்களை அகற்றி உடலை தூய்மையாக்கி கொழுப்பின் அளவை குறைப்பதற்காகவும் பயன்படுகிறது.

சிறுநீரகம், கணையம், கல்லீரல், சிறுநீர்ப்பை போன்ற அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. செரிமான அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படாமல் செரிமான அமைப்பை மேம்படுத்தி இரத்த ஒட்டத்தை சீரமைக்கிறது.

மேலும் மாதவிடாய் கோளாறால் அவதிப்படும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேயிலை, இஞ்சி சேர்த்து தேநீர் மாதிரியும் பருகலாம். எலுமிச்சை புல், இரண்டு மூன்று கிராம்பு, சிறிய துண்டு இலவங்கப்பட்டை, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் இதனை வடித்துவிட்டு குடித்தால் காய்ச்சல், இருமல், சளி ஆகியவை குணமடையும்.