இடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !

201806241603282515 Do not have hip pain SECVPF
201806241603282515 Do not have hip pain SECVPF

நாம் வேலைகளில் ஈடுபடும்போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம்.
உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்தும் உட்காருவதும் கூடாது.

தற்கால நல்ல நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. முதுகுப் புறமும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். இருக்கையின் உயரமும் முக்கியமானது. உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள நாற்காலிகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்.

உட்காரும்போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம். நிற்கும் போதும் இது முக்கியமானது. உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம்.

தச்சு வேலை, அச்சக வேலை, உடுப்பு அயன் பண்ணுவது, சமையல் செய்வது போன்ற நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் பாதகத்தை ஏற்படுத்தும். அவ்வப்போது நிலைகளை மாற்றி கொள்வது அவசியம்.

உங்கள் உடலுக்கு பயிற்சிகள் கொடுப்பது அவசியம். தினமும் ஏதாவது பயிற்சி செய்யுங்கள். நீந்துவது, நடப்பது, ஓடுவது போன்ற எதுவும் உதவும். இடுப்பு வலி ஏற்படாது தடுப்பதற்கு வயிற்றை தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும். தசைகளை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவையும் ஆகும்.

படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். இவற்றை தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம்.