குடைமிளகாயில் நிறைந்துள்ள சத்துக்கள்!

1527940181 073
1527940181 073

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

குடைமிளகாயில் விற்றமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. மேலும் விற்றமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.

குடைமிளகாயை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகளை விரைவாகத் தடுக்கலாம். குடைமிளகாயை உணவில் சேர்த்தால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடை மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.

குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.

குடைமிளகாயில் நிறைந்துள்ள “விற்றமின் சி” சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உடலில் சர்க்கரை அளவு குறையும்.