சக்கரை நோயை தடுக்கும் முருங்கைக்காய் தேநீர்

9
9

தினமும் உணவில் சிறிது முருங்கை இருந்தால் போதும் நோயே வராது என பெரியவர்கள் சொல்வதுண்டு.

அதற்குக் காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள்தான்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் வராமல் இருக்கவும் முருக்கைக்காயில் தேநீர் செய்து குடித்து வரலாம்.

முருங்கைக்காய் தேநீர் போடும் முறை

முருங்கைக்காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள்.

முருங்கைக்காய் சுருங்கி அதன் சாறு நன்கு இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள்.

பின் அந்த நீரை பருகுங்கள்.