குழந்தையின் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும் தாய்ப்பால்!

inner41533558397
inner41533558397

தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் விற்றமின்கள் மருந்துகள் எதுவும் கொடுக்க தேவையில்லை. அந்த அளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கு இணையான உணவு வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல, தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்கு பயன்படுகிறது.

இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து. இதனால் குழந்தைகளின் உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.

தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

தாய்ப்பாலில் சோடியம் குறைவாக இருப்பதால் குழந்தயின் சிறுநீரகத்திற்கு நல்லது. மேலும் வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும்.

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும்.

குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது.