வெண்டைக்காய் ஊறிய நீர் தரும் நன்மைகள்!

Rev cyril gamini 2
Rev cyril gamini 2

வெண்டைக்காய் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. வெண்டைக்காய் ஊறிய நீரில் விற்றமின் சி, விற்றமின் ஏ, மக்னீசியம் மற்றும் ஏராளமான விற்றமின்கள் அடங்கியிருக்கிறது.

நான்கைந்து வெண்டைக்காயை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, எட்டு மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை முழுவதும் ஊறவைத்த நீரில் கலந்து இருக்கும். இதுதான் வெண்டைக்காய் குடிநீர். இந்த வெண்டைக்காய் ஊரிய நீரை குடித்துவர பல நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் முதல் மலட்டுத்தன்மை வரை அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்கக்கூடியது இந்த வெண்டைக்காய் குடிநீர். இது ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக ரத்த அளவு அதிகரிக்கும். ரத்த சோகை குணமாகும். அனிமியா பிரச்சனைனால அவதிப்படுபவர்கள் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்து வர மிகவும் நல்லது.

வெண்டைக்காயில் இயற்கையாகவே இன்சுலின் அடங்கி இருக்கிறது. அதிலும் ஊறிய நீரை, சர்க்கரை நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெண்டைக்காயை, கரையக்கூடிய நார்ச்சத்து, அதிக அளவில் இருக்கிறது. குறைவான கலோரியைக் கொண்ட காய் என்பதினால் கொலஸ்ட்ரால் பிரச்சனை காரணமாக அவதிப்படுபவர்கள் இதை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.

அதிலும் வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்துவர, இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பின் அளவை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.