கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன் இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. கருப்பு தேயிலையில் 10% பாலிபீனால்கள் உள்ளது.
நன்மைகள்:
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை கருப்பு தேயிலை டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருப்பு தேயிலையில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
கருப்பு தேயிலையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
கருப்பு தேயிலையில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ஓய்வெடுக்க செய்கிறது.
தீமைகள்:
ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக கருப்பு தேயிலை டீ அருந்த கூடாது.
அதிகமான கருப்பு தேயிலை டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.
வெறும் வயிற்றில் கருப்பு தேயிலை டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.