கோவைக்காயின் மருத்துவக் குணங்கள்

கோவைக்காய்
கோவைக்காய்

நாம் அன்றாட உணவுகளில் கோவைக்காயை அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும்.

நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறிகளும் அங்காடிகளில் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய்.

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும்.

மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது இரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும்.

கோவைக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.  

நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்