பப்பாளி சாப்பிட்ட பின் ஏன் தண்ணீர் குடிக்க கூடாது

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 4

மிக உயர்ந்த ஒரு விஷயம் மிகச் சாதாரணமாக நமக்கு கிடைத்துவிட்டால் அதன் மகத்துவம் நம்மில் பெரும்பாலானோருக்கு புரியாமலேயே போய்விடும்.

பழங்களிலேயே இன்றைய தேதியில் குறைந்த விலைக்கு அதிகம் கிடைக்கும் ‘சீப்’பான பழம் என்றால் அது பப்பாளிதான். பப்பாளியின் விலை மிகவும் குறைந்தது. ஆனால் இதில் ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் அதிகம்.

சிட்ரஸ் பழங்களுக்கு இணையான வைட்டமின் ‘சி’ இப்பழத்தில் அதிகமாக உள்ளதால், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை நீக்கும் ஆற்றல் பப்பாளிக்கு இருக்கிறது.

பப்பாளியில் கிடைக்கும் அபரிமிதமான வைட்டமின் ‘ஏ’ சத்து கண்பார்வையை கூர்மையாக்கும். ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் மாலைக்கண் நோய் வராமல் காக்க இந்த பப்பாளி பயன்படுகிறது.

பழங்களில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதாவது, 100 கிராமிற்கு 29 கிலோ கலோரி இருக்கிறது. டயட் மூலம் உடல்பருமனை குறைக்க விரும்புவோர்க்கு பப்பாளியை தொடர்ந்து சாப்பிடலாம்.

பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது. பப்பாளி சரும பராமரிப்பிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பப்பாளி இலை சாறு டெங்கு நோயை தடுக்க பயன்படுகிறது. வெயில் காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லதுதான்.

இவ்வளவு பலன் கொடுக்கும் பப்பாளியை ஏன் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்றுசொல்கின்றார்கள் என பார்ப்போம்.

  • பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்குமாம்.
  • பப்பாளியில் பப்பைன் மற்றும் கைமோன்பப்பைன் என்ற பொருட்கள் இருப்பதால் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் பிரச்னையை போக்கி விடுகிறது. மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது குடலை சுத்தம் செய்கிறது.
  • பப்பாளியை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றுபோக்கு ஏற்படும்.
  • பப்பாளி, தர்பூசணி மற்றும் வெள்ளரியில் ஏற்கனவே அதிகபடியாக நீர்ச்சத்து இருப்பதால், இதனை சாப்பிட்ட பின் மீண்டும் தண்ணீர் குடிக்கும்போது வயிற்றில் உள்ள PH அளவு சீராக செயல்படாதாம்.
  • பப்பாளி மட்டுமில்லாமல் எந்த பழங்களை சாப்பிட்டாலும் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.