நீர்சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காயின் நன்மைகள்!

how to do cucumber facial 040520
how to do cucumber facial 040520

இயற்கை கொடுத்த அற்புற படைப்பில் கோடைக்காலத்தில் மக்களின் உடலையும், தாகத்தையும் தணிக்கும் அற்புத பொருள் வெள்ளரிக்காய். இதில் ஸ்டேரோல் என்ற பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்.

வெள்ளரிக்காயின் நன்மைகள்

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அடங்கியுள்ளது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை சரியாக்கும்.
வெள்ளக்காய் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும்.

வெயில் காலத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலம் அதிக வலுவாக இருத்தல் வேண்டும். இல்லையெனில், எண்ணற்ற நோய்களின் கூடாரமாக நமது உடல் மாறி விடும்.

உடலுக்கு உடனடி ஆற்றலை தருவதற்கு வெள்ளரிக்காய் ஒன்றே போதும். மேலும், மூளையின் திறனையும் சுறுசுறுப்பாக வைக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

வெள்ளரிக்காய் கண் எரிச்சல், கரு வளையங்கள் போன்றவற்றை குணப்படுத்தும்.

என்றும் இளமையாக இருக்க முகத்தின் அழகையும் பாதுக்காக்க வெள்ளரிக்காய் பெரிதும் பயன்படுகிறது.

சிலிகா வெள்ளரிக்காயில் அதிகமாக உள்ளதால் முடிகள் செழித்து வளர இது உதவி செய்யும்.

வெள்ளரிக்காயை கை மற்றும் கால் பகுதிகளில் தடவி வந்தால் தோல் மென்மையாகும்.