அற்புத பலன்களை தரும் இயற்கை மருந்து முருங்கைக் கீரை!

aaaaaa
aaaaaa

வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்யும்.

முருங்கை கீரையில் 67 வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தாக செயல்படுகிறது.

முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன . முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.

முருங்கையின் நன்மைகளாக

சர்க்கரை நோயாளிகளுக்கு

முருங்கை கீரை சர்க்கரை நோயாளிகளின் குளோக்கோஸை குறைக்கும். இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்க உதவி செய்யும்.

புண்களை குணமாக்கும்

முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது. இது புண்கள் மற்றும் புண்களிலிருந்து இரத்தம் வெளியேறுவதை வேகமாக குறைக்கும்.

வயிற்றுப் பிரச்சினை போக்கும்

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாக உள்ளது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பரந்து போகும்.

தாய்பால் சுரக்க

முருங்கை கீரையை சாப்பிட்டால் கர்ப்பப்பையின் குறைகளை போக்கிவிடும். பெண்கள் கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். முருங்கை இலை தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்கும்.

மார்பு சளியை சரி செய்ய

முருங்கை கீரையின் சூப்பை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகள் சரியாகும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவாக இருக்கும்.